விவேக் உடலுக்கு அரசு மரியாதை - தமிழக அரசு அறிவிப்பு!

சனி, 17 ஏப்ரல் 2021 (13:53 IST)
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் அரசு சம்மந்தப்பட்ட அனைத்து விழிப்புணர்வு விளம்பரங்களிலும் தாமாக முன் வந்து நடித்தவர் மற்றும் இளைஞர்கள் இடையே மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவித்தவர் எனப் பல்வேறு சமூக நோக்குள்ள செயல்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்ட விவேக்கின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையோடு நடத்தப்பட வேண்டும் எனக் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இப்படியான நேரத்தில் அரசு சார்பில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி தமிழக அரசு கேட்டது. அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நடிகர் விவேக் இறுதி மரியாதையில் காவல்துறை அணிவகுப்புடன் மரியாதை செலுத்தப்படும் என்று தமிழ அரசு அறிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்