நடிகர் விவேக் மறைவுக்கு குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்திய சூர்யா!

சனி, 17 ஏப்ரல் 2021 (10:51 IST)
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார் என்றும் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 15 அம் தேதி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.   
 
இதனிடையே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. பின்னர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.  இவரது மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் நடிகர் சூர்யா, கார்த்தி,  ஜோதிகா உள்ளிட்டோர் விவேக்கிற்கு இறுதி அஞ்சலி  செலுத்தியுள்ளனர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்