காதலியுடன் ஆடம்பரமாக வாழ பணம் தேவைப்பட்ட காரணத்தால் தான் பாவனாவைக் கடத்தினோம் என்று பல்சர் சுனில் விசாரணையின் போது போலீசாரிடம் கூறியுள்ளார்.
பாவனாவைக் கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் முக்கிய குற்றவாளிகளான பல்சர் சுனி மற்றும் விஜீஸ் இருவரையும் நேற்று போலீஸார் விசாரித்தனர். அதில், பாவனாவிடம் நிறையப் பணம் இருக்கிறது. என் காதலியுடன் ஆடம்பரமாக வாழ பணம் தேவைப்பட்டது. பணத்துக்காகத்தான் பாவனாவை கடத்தினோம். பாவனா போலீசில் புகார் செய்யமாட்டார் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்ததற்கு மாறாக புகார் செய்துவிட்டார்.
காருக்குள் பாவனாவை மிரட்டி சித்ரவதை செய்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்தோம். போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த செல்போனை கழிவுநீர் ஓடையில் வீசி விட்டோம் என்று கூறியுள்ளனர்.