பாலாவுக்கும் விக்ரமுக்கும் செட் ஆகல? வர்மா கைவிடப்பட்ட பின்னணி...

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (20:54 IST)
சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படம் மொழி மாற்றம் செய்யாமலேயே பல மாநில ரசிகர்களை கவர்ந்தது. 
 
காதல், காமம், அழுகை, கோபம், பெண்கள் தொடர்பு, மது, சிக்ரெட், என ஒரு மனிதனின் உணர்ச்சி குவியல்கள் அத்தனையும் எதார்த்தமான நடிப்பினால் உருவான இப்படம் மிகப்பெரும் போட்டிகளுக்கு இடையில் E4 எண்டெர்டைன்மெட் நிறுவனம் முதலில் முந்திக்கொண்டு தமிழ் ரீமேக்கை தயாரித்தது. 
 
விசித்திர கதையம்சம்கொண்ட படங்களுக்கு பெயர்போன இயக்குனர் பாலா இப்படத்தை தயாரிக்க விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்ட நிலையில், படம் கைவிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. 
படம் கைவிடப்பட்டத்திற்கான காரணங்கள் பல கூறப்படுகின்றன. தற்போது தயாரிப்பு தரப்பின் நெருங்கிய வட்டாரங்கள் கூறும் காரணம் பின்வருமாறு, முதலில் ரீமேக் படத்தை எடுக்க பாலா விரும்பவே இல்லை. அவரை கட்டாயப்படுத்திதான் சம்மதிக்க வைத்தார்கள். 
 
வர்மா படத்தின் கதையில் பாலா ஏகப்பட்ட மாற்றங்கள் செய்தார். அசல் தெலுங்கு பதிப்பில் சில காட்சிகளில் மட்டுமே வரும் வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் வேடத்தை பெரிதாக்கி படம் முழுக்க வருவது போல மாற்றி அமைத்தார்.
 
படம் துவங்கியபோதே விக்ரமுக்கும், பாலாவுக்கும் செட் ஆகவில்லை. பாலா இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொன்னார். ஆனால் விக்ரம் அதை நிராகரித்து அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் இசையமைப்பாளர் ரதனை ஒப்பந்தம் செய்ய சொன்னதாகவும் தெரிகிறது.
முழு படத்தையும் பார்த்த விக்ரமுக்கும், அவரது மகன் துருவ்வுக்கும் திருப்தி இல்லை. நெருக்கமான காட்சிகள் அதிகமாக படத்தில் இருந்ததும் இதற்கு காரணம். இந்த படத்தை ரிலீஸ் செய்தால் துருவ்வுக்கு மோசமான தொடக்கமாக அமையும் என்பதால்தான் விக்ரம் பாலாவின் நட்பை மீறி இந்த முடிவை எடுத்து உள்ளாராம்.
 
அதேபோல் படத்தை பார்த்த தயாரிப்பாளர் கதையில் சில மாற்றங்கள் செய்ய கூறி இருக்கிறார். ஆனால் ஒரு காட்சியை கூட மாற்ற மாட்டேன் என்று பாலா கூறிவிட்டாராம் என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்