’தளபதி 66’ படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (16:14 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’  திரைப்படத்தின் அதிகாரபூர்வ நாயகி யார் என்பதை சற்று முன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் 
 
தளபதி 66 படத்தை தயாரிக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று ராஷ்மிகா மந்தனா தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக தளபதி விஜய் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா தளபதி 66 படம் மட்டுமின்றி அதற்கு முந்தைய சில படங்களில் விஜய்யுடன் ஜோடியாக நடிக்கப் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ’தளபதி 66’  திரைப்படத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்