படத்தில் நடிக்க ரூ.4 கோடி சம்பளம்: ராஷ்மிகா மந்தனா விளக்கம்

Sinoj
புதன், 7 பிப்ரவரி 2024 (16:45 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர்  கடந்த 2016 ஆண்டு க்ரிக் பார்டி என்ற கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
 

இவர், அல்லு அர்ஜூனுடன் இவர் இணைந்து நடித்த புஷ்பா முதல் பாகம், விஜயுடன் இணைந்து நடித்த வாரிசு ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.

இதையடுத்து அவர் பாலிவுட்டில் நடிகர் ரன்பீர் கபீருடன் இணைந்து நடித்த அனிமல் என்ற படம் விமர்சனங்களை தாண்டி வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளை தாண்டி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக  வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

தற்போது இவர், புஷ்பா 2, ரெயின்போ ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். அனிமல் படத்தில் நடிக்க அவர் ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியதாகவும், அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்களுக்கும் இதே சம்பளத்தை அவர் கேட்பதாக கூறப்பட்டது.

இதுகுறித்து ராஷ்மிகா மந்தா,  நான் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறுகிறார்கள் இதைக் கேட்ட பின்புதாக் சம்பளத்தை உயர்த்த வேண்டுமென தோன்றுகிறது.

சினிமா தயாரிப்பாளர்கள் யாராவது கேட்டால், மீடியாக்களில் இப்படித்தான் கூறுகிறார்கள், அதனால், அவர்களின் வார்த்தைகளின்படிதான் வாழ வேண்டும் என தெரிவிக்கப் போகிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்