திரிஷாவுக்கு பெற்றோர் பார்த்த தொழிலதிபர் மாப்பிள்ளை.. விரைவில் திருமணமா?

Mahendran

வெள்ளி, 10 அக்டோபர் 2025 (11:29 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பெற்றோர் சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவருக்கு நிச்சயித்துள்ளதாகவும், இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கி பழகியவர்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
திரிஷா இதற்கு முன்னர் 2015-ல் தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தான் தொடர்ந்து நடிப்பது என்ற முடிவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், அவர்களின் உறவு விரைவில் முறிந்தது.
 
திரிஷா, நடிகர் விஜய்யுடன் 'கில்லி', 'திருப்பாச்சி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர்களது கெமிஸ்ட்ரி குறித்து வந்த காதல் கிசுகிசுக்களை இருவருமே  மறுத்தனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு, 'லியோ' திரைப்படத்தில் இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்