அஜித் 59 படத்தில் உள்ள சர்ப்ரைஸஸ்

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (07:54 IST)
அஜித் 59 படத்தில் தந்தி டி.வி. புகழ் ரங்கராஜ் பாண்டே நடிக்க இருப்பதாக புதுத் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிற்து.

அஜித் நடிப்பில் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் ஆகிய படங்களின் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இந்த படத்தினை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். மிகப்பெரியக் கடனில் இருக்கும் போனிக் கபூரின் கடன்சுமையை குறைப்பதற்காக அஜித் மிகக்குறைந்த சம்பளத்தில் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடந்துள்ளது. இந்தப் படத்தினைக் குறுகியக் காலப் படமாக முடித்து அடுத்தாண்டு மே 1 அஜித் பிறந்தநாளில் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில் தந்தி டி.வியில் இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்திற்கு பில்லா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். மேலும் பில்லாப் படத்தின் மூலம் ஹிட் காம்போவோக அறியப்பட்ட அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் இணைய இருக்கின்றனர்.

இதை உறுதிசெய்யும் விதமாக இன்று நடைபெற்ற பூஜையில் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்