ராணாவை பற்றி கசிந்த சுவாரஸ்ய தகவல்!!

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (15:34 IST)
தெலுங்கு நடிகர் ராணா முன்னாள் சிபிஐ அதிகாரி டிஆர் கார்த்திகேயனை சந்தித்து பேசியுள்ளார். 


 
 
பாகுபலி 2 படத்திற்கு பிறகு ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் ஆஸ்போடா - தி ஹ்யூமன் பாம்ப் என்ற படத்தில் நடிக்க உள்ளார். 
 
இந்த படம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் ராணா சிபிஐ அதிகாரி டிஆர் கார்த்திகேயனாக நடிக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்த சிறப்பு குழுவின் தலைவராக இருந்தவர் கார்த்திகேயன். 
 
ஒரு படத்தில் நடித்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட வேண்டும் என்று நினைப்பவர் ராணா. அதனால் தான் இந்த படத்திற்காக இத்தனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ராணா.
அடுத்த கட்டுரையில்