“விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க ஆசை” – ரம்யா நம்பீசன்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (13:50 IST)
‘விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க ஆசை’ என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.


 
 
‘சேதுபதி’ படத்தைத் தொடர்ந்து ‘சத்யா’, ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படங்களில் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன். அத்துடன், கன்னடத்தில் ‘குருஷேத்ரா’ படத்திலும் நடித்து வருகிறார். 
 
தமிழில் எப்படியாவது மார்க்கெட்டைப் பிடித்துவிட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவரிடம், ‘மறுபடியும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிப்பீர்களா?’ என்று கேட்கப்பட்டது.
 
“அவருடன் தொடர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறேன். ‘பீட்சா’ படத்துக்கு முன் நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அந்தப் படத்தின் மூலம் பரவலான கவனம் பெற்றேன். அதற்குப் பிறகு பல படங்களில் நடித்தாலும், ‘சேதுபதி’ படம்தான் மறுபடியும் எனக்கு ஹிட் கொடுத்தது. எனவே, எனக்கு ராசியான நடிகர் விஜய் சேதுபதி தான்” எனத் தெரிவித்துள்ளார் ரம்யா நம்பீசன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்