அரசியல்வாதியாக களமிறங்கிய ரம்யாகிருஷ்ணன்

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (12:14 IST)
பாகுபலி படத்திற்கு பிறகு ரம்யாகிருஷ்ணன் தெலுங்கில் பெயரிடாத படத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். 


 

 
ரம்யாகிருஷ்ணன் அழுத்தமான கதாபாத்திரத்தில் அசத்தலாக நடிப்பவர். தமிழில் இவர் நடித்த படையப்பா படம் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இவரை ரம்யாகிருஷ்ணன் என்பதை விட நீலாம்பரி என்றே சில காலம் எல்லோரும் அழைத்து வந்தனர். அதன்பின் பாகுபலி படம் அதேபோன்று இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ராஜ மாதா சிவகாமி கதாபாத்திரம் எல்லோர் மனதையும் வென்றது.
 
இதையடுத்து தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தமிழில் சபாஷ் நாயுடு, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களிலும் இவரது கதாபாத்திரம் பேசப்படும் என கூறப்படுகிறது. தற்போது தெலுங்கில் பெயரிடாத படம் ஒன்றில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். 
 
மேலும் இதன்மூலம் ரம்யாகிருஷ்ணனுக்கு படையப்பா மற்றும் பாகுபலி ஆகிய படங்கள் வரிசையில் இந்த படமும் அமையும் என சினிமா துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்