தம்பியை ஹீரோவாக்கிய கார்த்தி பட நாயகி!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (06:53 IST)
கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மற்றும் 'தேவ்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்த நடிகை ரகுல் ப்ரித்திசிங் தற்போது சூர்யாவுடன் 'என்.ஜி.கே', சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் என தெலுங்கை போலவே தமிழிலும் பிசியாக உள்ளார். இந்த நிலையில் ரகுலின் தம்பி தற்போது ஒரு படத்தின் ஹீரோவாகியுள்ளார்.
 
ரகுல் ப்ரித்திசிங் சகோதரர் அமன் ஏற்கனவே ஒரு பாலிவுட் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளிவராத நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் அமன் தற்போது ஹீரோவாகியுள்ளார். இன்னும் இந்த படத்திற்கு டைட்டில் முடிவு செய்யப்படவில்லை.
 
தாசரி லாரன்ஸ் இயக்கவுள்ள இந்த படத்தின் நாயகியாக மோனிகா ஷர்மா என்ற புதுமுகம் நடிக்கவுள்ளார். அமன் - மோனிஷா ரொமான்ஸ் காட்சிகள் தான் இந்த படத்தின் ஹைலைட் என்று கூறப்படுகிறது.
 
இந்த படத்தை ரஜினி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் தம்பிக்காக ரகுல் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்