நண்பர்கள் மூலம் அந்த வேலையை செய்த ரகுல் ப்ரீத் சிங்!- அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (13:18 IST)
அழகு பதுமை ராகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
 
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல படங்களில் பிசியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு 
திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்கள். ஆனால் இவரோ இந்த வேலையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி தனது நண்பர்களிடம் தனக்கு மாப்பிள்ளை பார்க்கும்படி சொல்லியுள்ளாராம் . 
 
இது குறித்து அவர் அளித்துள்ள பே ட்டியில், நான் பஞ்சாபி பொண்ணு. அப்பா ஆர்மி மேன். அப்பாவை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வேற வேற ஊருக்கு மாத்திக்கிட்டே இருப்பாங்க. அதனால நான் இந்தியாவுல பல இடங்கள்ல வாழ்ந்திருக்கேன். எனக்கு பயணம் செல்வது ரொம்பப் பிடிக்கும். இப்போ குடும்பம் டெல்லியில இருக்கு. நான் ஐதராபாத்தில் இருக்கேன். எந்த முடிவாக இருந்தாலும், ‘நீதான் எடுக்கணும்’னு அம்மா சொல்வாங்க. ஆனா அதற்கான பக்குவம் இன்னும் எனக்கு வரலை. அதனால எந்த ஒரு வி‌ஷயத்தையும் அப்பாகிட்ட கேட்டுத்தான் முடிவு பண்ணுவேன்.
 
சினிமாவுல அறிமுகமானதில் இருந்தே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எப்படி?
 
 பிட்னெஸை பராமரிக்கிறது தான் என் முக்கியமான பொழுதுபோக்கு. சின்ன வயசுலேயே கராத்தேயில புளூ பெல்ட் வாங்கியிருக்கேன். ஸ்கூல் படிக்கும்போது தேசிய அளவிலான கோல்ப் போட்டிகளில்  விளையாடியிருக்கேன். மாசத்துல ஒரு தடவையாவது கோல்ப் கிரவுண்ட்டுக்குப் போயிடுவேன். இல்லைனா, இன்டோர் கேம்ஸ் விளையாடுவேன்.
 
‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ திட்டத்தின் தெலுங்கானா தூதரா இருக்கீங்களே... அது பற்றி..?
 
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதுதான். ஒரு பெண் குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது என்பது அந்தக் குடும்பத்துக்கே கல்வி அளிப்பதற்கு சமம். கிராமங்களில் நடிகர்களைக் கடவுள் மாதிரி நினைக்கிறாங்க. அதனால, மக்கள்கிட்ட நேரடியா போய் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்னா, நிச்சயம் மாற்றம் உருவாகும்.
 
கேரியர் மீது செலுத்தும் கவனத்தை தனிப்பட்ட வாழ்க்கை மீதும் செலுத்துமாறு என் அம்மா கூறுகிறார். எப்பொழுது பார்த்தாலும் வேலை வேலை என்று இருக்க வேண்டாம் என்கிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகுமாறும் அம்மா வலியுறுத்தி வருகிறார். இன்னும் எத்தனை நாட்களுக்கு சிங்கிளாக இருப்பது என்று அம்மா கேட்கிறார். என் அம்மா சொல்வது போன்று உடனே திருமணம் செய்து கொள்ள எனக்கு மும்பை அல்லது ஐதராபாத்தில் காதலர் இல்லை. அதனால் யாரையாவது பார்த்துக் கொடுக்குமாறு நண்பர்களிடம் தெரிவித்துள்ளேன்.
 
6 அடி உயரம் இருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேசுபவராக இருக்க வேண்டும்.
 
(ஒருவேளை இவர் எதிர்பார்ப்பது  ராணாவோ) என நாம் யோசித்தால் அதுதான் இல்லை ..
 
நானும் ராணாவும் நல்ல நண்பர்களே தவிர காதலர்கள் இல்லை என்று கூறி புன்னகைத்தார் ரகுல் ப்ரீத் சிங். 
 
இவரின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்