இரவின் நிழல் நெகட்டிவ் விமர்சனம்… ப்ளுசட்ட மாறனின் உருவ பொம்மையை எரித்த பார்த்திபன் ரசிகர்கள்!

செவ்வாய், 19 ஜூலை 2022 (15:04 IST)
நடிகர் பார்த்திபன் நடித்த இரவின் நிழல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளன.

பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ’இரவின் நிழல் படத்திற்கு முன்பே சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் வெளியாகி விட்டது என புளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார் 

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகிய ஈரானிய திரைப்படமான ‘Fish and Cat' என்ற திரைப்படம் தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்றும் இதை உலக சினிமா பத்திரிகைகள் ஏற்றுக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

எனவே பார்த்திபன் விளம்பரம் செய்வதுபோல் உலகின் முதல் நான்லீனியர் திரைப்படம் இரவில் நிழல் அல்ல என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான ஆதாரங்களையும் அவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ப்ளுசட்ட மாறனின் இந்த விமர்சனங்கள் சம்மந்தமாக சமூகவலைதளங்களில் கடுமையான எதிர் விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்போது சிலர் ப்ளுசட்ட மாறனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து எரித்து சில ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்