பட்டு வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்! – அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (11:08 IST)
நீண்ட நாட்களாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக இடையிடையே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டும் வந்தது. இந்நிலையில் ஒருவழியாக படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. பட்டு வேட்டி, சட்டையில் உள்ள ரஜினிகாந்தின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்