ரஜினி அரசியலுக்கு ரெடியோ இல்லையோ...’அடுத்த படத்துக்கு பக்கா ரெடி’...

திங்கள், 4 பிப்ரவரி 2019 (17:54 IST)
சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பேட்ட படம். இந்நிலையில் ரஜினிகாந்த், அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகிறது.
இப்படத்தையும் லைக்கா புரொடெக்சன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கவுள்ளார். இப்படம் ரஜினிக்கு 166 வது படம் என்பதால் மிகப்பிரமாண்டமாக தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
மேலும் இப்படத்திற்கு இசை அனிருத் என்றும், ப்ரீ புரொடெக்‌ஷன் வேலைளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் இதற்காக ரஜினி 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்