'அந்தநாள் ஞாபகம்'...ஜெயநகரா பேருந்து டிப்போவுக்கு விசிட் அடித்த ரஜினிகாந்த்..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (13:47 IST)
பெங்களூர் மாநிலத்தில் தான்   பணியாற்றிய ஜெயநகரா பேருந்தின் பணிமனையிக் தற்போது பணியாற்றி வரும் ஓட்டுநர் மற்றும் நடந்துநர்கள் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த்  கலந்துரையாடினார்.

தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்  நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம்  ஜெயிலர்.

இப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து,. ‘’ரஜினி170’’ படத்தில் நடிக்க ரஜினி தயாராகி வருகிறார்.

ரஜினி சினிமாவில் பாலசந்தர் இயக்கத்தில் அறிமுகமாவதற்கு முன்பு அவர் பெங்களூரில் அரசு பேருந்து நடத்துனராக பணியாறி வந்தார்.

இந்த நிலையில், தான் பணியாற்றிய பெங்களூரு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு  ரஜினி திடீரென்று சென்று, அங்குள்ள ஓட்டுனர்கள், நடத்துனர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்