லால் சலாம் படத்துக்கு ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சனி, 16 செப்டம்பர் 2023 (08:00 IST)
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் புதுபடம் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் சம்மந்தமான சில காட்சிகள் மும்பையில் சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது.

ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் திருவண்ணாமலை மற்றும் மும்பையில் படமாக்கி முடிக்கப்பட்டன. பின்னர் ஒருநாள் சென்னையில் ஒருநாள் படமாக்கப்பட்டது.

இப்போது ஷுட்டிங் கிட்டத்தட்ட முடிந்து அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது படத்துக்காக ரஜினிகாந்த் கேட்டுள்ள சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சிறப்புத் தோற்றத்தில் குறைந்த நாட்களே நடித்துள்ளதால் இந்த படத்துக்கு அவர் 40 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்