நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர் . இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் என்பதும் அவருடன் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, ஆகியவர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது பெரும்பாலான காட்சிகளுக்கான ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி, ரஜினி டப்பிங் பேச ஆரம்பித்து விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் அவரின் டப்பிங் பணிகள் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.