இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே இது குறித்து கூறிய போது தோனி பயிற்சி செய்யப் போகிறார் என தெரிந்தாலே மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றும், அவர் கிளவுஸ் மாட்டுவதை திரையில் காட்டும் போது மைதானத்தில் உச்சகட்ட சத்தம் எழுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தோனிக்கு 75 வயது ஆகும் வரை சென்னை ரசிகர்கள் அவரை ஓய்வு பெற விடமாட்டார்கள் என்றும் ஏழாவது எட்டாவது அல்லது பத்தாவது கூட தோனி பேட்டிங் செய்ய வரட்டும், ஆனால் சிஎஸ்கே கேப்டனாக அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது என்று ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.