ரஜினி பட நடிகை அமைச்சர் ரோஜாவுடன் சந்திப்பு... வைரலாகும் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (14:00 IST)
தமிழ் சினிமாவின் 80, 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் படையப்பா, பாபா ஆகிய படங்களை அடுத்து, ரஜினியுடன் இணைந்து  ஜெயிலர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன்  சமீபத்தில்  ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜாவை அவரது வீட்டில்  சந்துத்துள்ளார்.

அப்போது, இருவரும் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில், ரம்யாகிருஷ்ணனை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியாக  நிகழ்வு…அந்தக் காலத்தில் எங்கள் வாழ்க்கையில் இருந்த மகிழ்ச்சியான தருணங்களைப் பற்றி உரையாடினோம் என்று பதிவிட்டு, இருவரின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்