சூர்யா படத்தை தள்ளிவைக்கிறாரா ஞானவேல்? அடுத்த படம் இவருடன்தானா?

புதன், 15 பிப்ரவரி 2023 (15:55 IST)
ஜெய் பீம் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் த செ ஞானவேல் அடுத்து எந்த படத்தை இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினியின் அடுத்த பட இயக்குனர் பட்டியலில் ஜெய்பீம் புகழ் ஞானவேலும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக சூர்யாவை வைத்து அவர் இயக்க இருந்த படத்தை சில மாதங்கள் தள்ளிவைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்