அனிருத்தை கை கழுவிய ரஜினி குடும்பம்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2017 (16:01 IST)
இளம் இசையமைப்பாளர்களில் முன்னனியில் இருப்பவர் அனிருத். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதால் முன்னனி இயக்குனர்களில் முதல் சாய்ஸாக இவர் உள்ளார்.


 

நடிகர் ரஜினிகாந்தின் உறவினர் மகனான இவர் தனுஷ் நடிப்பில் அவரது மனைவி இயக்கிய 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து வணக்கம் சென்னை,கத்தி,வேதாளம் என சூப்பர் ஹிட் படங்களில் பணியாற்றினார். குறிப்பாக தனுஷ் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறினார்.

அனிருத் வளர்ச்சியில் ஒரு திருஷ்டியாக விழுந்தது பீப் பாடல் சர்ச்சை. இந்த பாடலுக்கு இசையமைததால் மகளிர் அமைப்புகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அவரை கழுவி ஊற்றினர். இந்த சம்பவத்தில் அனிருத் மீது வருத்தம் அடைந்த ரஜின்காந்த் அவரது பெற்றோரிடம் கண்டித்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து தனுஷ் நடித்த கொடி படத்திலிருந்து அவரை நீக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார், அடுத்து அவர் இயக்கும் பவர் பாண்டி படத்திற்கு ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக்கினார். தொடந்து விஐபி2விலும் ஷானை ஒப்பந்தம் செய்தார்.

தனுஷ் மனைவி தற்போது இயக்கவுள்ள மாரியப்பன் படத்திலும் ஷான் ரோல்டனே ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனால் அனிருத்தை ரஜினி குடும்பம் முழுவதும் ஒதுக்குவது  நன்றாகவே தெரிகிறது என திரையுலகில் பேசப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்