கபாலி பட விமர்சனத்தை ரஜினி எதிர்பார்ப்பது இவரிடம்தான்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (11:57 IST)
ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது.  திரை அரங்குகள் எல்லாம் திருவிழா போல் காட்சியளிக்கிறது. 


 

 
சென்னையில் பெரும்பான திரை அரங்குகளில் கபாலி படம் திரையிடப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.
 
ஒருபுறம், அந்த படத்தின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. வழக்கம்போல் கபாலி படத்தின் நிறையையும் குறையும் அலசி ஆராய்கிறார்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள். 
 
இது ஒருபக்கம் இருந்தாலும், கபாலி பட விமர்சனம் பற்றி ஒருவரின் கருத்தை பற்றி தெரிந்து கொள்ள ரஜினி ஆவலுடன் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அவர் வேறு யாரும் அல்ல. ரஜினியின் ஆருயிர் நண்பர் ராஜ்பகதூர். தற்போது அவர் பெங்களூரில் வசிக்கிறார்.
 
ரஜினி நடத்துனராக பணிபுரிந்த பேருந்தில் ராஜ்பகதூர்தான் ஒட்டுனர். பெங்களூரில் 10ஏ பேருந்தில், 1970 ஆம் ஆண்டிலிருந்து 3 வருடங்கள், ரஜினியும் அவரும் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். 


 

 
ரஜினியிடன் இருக்கும் நடிப்பாற்றலை புரிந்து கொண்டு இவர்தான் ரஜினியை சென்னைக்கு அனுப்பி வைத்து நடிப்பு பயிற்சி கல்லூரியில் படிக்க வைத்தார். படிப்புக்கான செலவுகளையும் இவரே ஏற்றார். இதனால் ரஜினிக்கும் எப்போதும் இவர் மேல் அலாதியான நட்பும், பிரியமும் உண்டு. எப்போது ரஜினி பெங்களூர் சென்றாலும் இவரின் வீட்டிற்கு சென்று விடுவார். சென்னை வந்து தன்னுடன் தங்குமாறு ரஜினி பலமுறை அழைத்தும், நட்பு பாதித்துவிடும் என்பதால் ராஜ்பகதூர் அதை மறுத்துவிட்டார். 
 
ரஜினியின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும், இவரின் விமர்சனத்துக்காக ரஜினி காத்திருப்பது வழக்கமான ஒன்றுதான். அதுபோல் கபாலிக்காகவும் காத்திருக்கிறார் ரஜினி.
அடுத்த கட்டுரையில்