26 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு ரஜினியும், மம்முட்டியும் இணைந்து நடித்த தளபதி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்த ரஜினிகாந்த் தற்போது முதல் முறையாக தனது தாய் மொழி படத்தில் நடிக்கிறார்.