தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் பற்றிய தகவல்கள் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்தின் வெற்றிக்குப் பின், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமான முறையில் தயாராகி வரும் இப்படத்தின் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிகிறது.
இந்த நிலையில், ரஜினியின் அடுத்த இரண்டு படங்களை பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட வெற்றிப்படத்தையும், கமலின், இந்தியன்-2 ஆகிய படங்களை தயாரித்து வரும் லைகா தான் தயாரிக்கவுள்ளதாகவும், இதற்காக ஒப்பமும் கையெழுத்தாகியுள்ளதாகவும், தகவல் வெளியாகிறது.
மேலும், இதில் ஒரு படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
.
Edited by Sinoj
#Rajinikanth Signed Two Films With LYCA PRODUCTION