கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அமைச்சர் அமித்ஷா?

ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (12:48 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவர் குணம் அடைந்து உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனை பாஜக எம்பிமனோஜ் திவாரி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கொரோனா பாதிப்பு காரணமாக அவர் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமித்ஷா அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்ததன் காரணமாக தற்போது அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது. இதனை பாஜக எம்பி மனோஜ் திவாரி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் அமித்ஷாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் என்ற தகவல் பாஜக தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்