ஓவியாவின் படுமோசமான 90ML; கலக்கத்தில் பேய் பட நடிகர்

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (20:29 IST)
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து இயக்குனராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். தமிழில், ராகவா லாரன்ஸ், ராய் லட்சுமி, கோவை சரளா, சரத்குமார் நடித்த படம் காஞ்சனா.

இந்த படம் நல்ல ஹிட் அடித்ததால், இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியானது. அந்த வகையில் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ள காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, கபீர்சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெற்றி ஒளிப்பதிவில் எஸ்.தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், சமீபத்தில் வெளியான 90ML படத்தால் ரசிகர்கள் ஓவியாவை வெறுக்க துவங்விட்டனர். 
 
இதனால் காஞ்சனா 3 படத்தின் வெற்றிக்கு பாதிப்பு வருமோ என கலக்கத்தில் இருக்கிறாராம் நடிகர் ராகவா லாரன்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்