விஜய் சேதுபதியின் இந்தி படத்தில் இணைந்த ராதிகா… வைரலாகும் புகைப்படம்!

புதன், 20 ஏப்ரல் 2022 (17:39 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் காத்ரினா கைஃப் கதாநாயகியாக நடிக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்  ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு இப்போது மெர்ரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது தமிழின் முன்னணி நடிகையான ராதிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் நடிகை காத்ரினா கைஃப் உடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தையும் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்