குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்த நடிகை ராதிகா!!!

Webdunia
ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (11:01 IST)
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன் என நடிகை ராதிகா கூறியுள்ளார்.
 
ஈஸ்டர் தினமான இன்று கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. இதில் மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் நடிகை ராதிகா தனது டிவிட்டரில் இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. நான் தற்போது தான் சின்னமன் ஹோட்டலில் இருந்து கிளம்பினேன். தற்போது குண்டு வெடித்துள்ளது. நம்ப முடியவில்லை அதிர்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்