பிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி! – தமிழ் ப்ரோமோ வெளியானது!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (09:50 IST)
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் தமிழ் ப்ரோமோ காதலர் தினமான இன்று வெளியாகியுள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள காதல் படம் ‘ராதே ஷ்யாம்’. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் ராதா கிருஷ்ண குமார் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் முழுவதும் தயாராகி ரிலீஸுக்கு உள்ள நிலையில் இந்த படத்திற்கான முதற்கட்ட ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் ஜூலை 30ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்