நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்: விஷால்

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2016 (19:55 IST)
நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


 

 
தென் இந்நிய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் இன்று பிற்பகல் கூடியது. பொதுக்குழு நடைப்பெற ஆரம்பித்த சிறுது நேரத்திலே வளாகத்தில் கலவரம் வெடித்தது. காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரத்தை கலைத்தனர். கலவரத்தில் முன்னாள் நடிகர் சங்க உறுப்பினர்கள் 21 பேர் கைதுச்செய்யப்பட்டனர். கலவரத்தில் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
 
ஏற்கனவே ஏற்கனவே தற்காலிகமாக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோரை நிரந்தரமாக நீக்கம் செய்ய பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்