இந்தியா முழுக்க ரிலீஸ் ஆனா அது பான் இந்தியா திரைப்படம் இல்ல…. இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேச்சு!

செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (09:43 IST)
இயக்குனர் ஆர் வி உதயகுமார் கற்றது மற என்ற படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

கிழக்கு வாசல், பொன்னுமணி, சின்னக்கவுண்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி 90 களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் ஆர் வி உதயகுமார். தற்போது அவர் கற்றது மற என்ற படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டு பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் ‘தற்போது பேன் இந்தியா ரிலீஸ் என்ற பெயரில் இந்தியா முழுவதும் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் இந்தியா முழுக்க ரசிக்கப்பட்டால்தான் அது பேன் இந்தியா திரைப்படம். விரைவில் க்யூ ஆர் கோட் மூலமாக ஸ்கேன் செய்து படங்களை 25 ரூபாயில் செல்போனிலேயே பார்க்கும் வசதிகள் வரலாம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்