நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ஹே சினாமிகா மற்றும் சல்யூட் ஆகிய படங்கள் வெளியாகி கவனிக்கப்பட்டன. மூன்று மொழிகளில் நடித்தாலும் துல்கர் துல்கர் இதுவரை இரு மொழிப் படங்களில் நடித்ததில்லை.
இந்நிலையில் சமீபகாலமாக பேன் இந்தியா ரிலீஸ் என்று சொல்லப்படும் அனைத்து மொழிகளிலும் படங்களை ரிலிஸ் செய்யும் போக்கு அதிகமாகியுள்ளது. ஒரு மொழியில் எடுத்து அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள துல்கர் ஒரு மொழியில் அம்மக்களின் பண்பாட்டை வைத்து எடுக்கப்படும் படங்களை பேன் இந்தியா ரிலிஸ் செய்வதில் உடன்பாடில்லை. அந்த வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலாக உள்ளது எனக் கூறியுள்ளார்.