பொங்கல் போட்டியில் இணைந்த ஆர்.கே.சுரேஷ்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (13:16 IST)
ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘பில்லா பாண்டி’ படத்தை பொங்கலுக்கு வெளியிட முயற்சி செய்து வருகின்றனர்.


 


‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக அறிமுகமானார் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான ஆர்.கே.சுரேஷ். அவர் நடிப்பு பயங்கரமாக இருந்ததால், நிறைய படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது. ‘இப்படை வெல்லும்’, ‘தனி முகம்’, ‘ஸ்கெட்ச்’, ‘வேட்டை நாய்’, ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களில் தற்போது நடித்துவருகிறார் ஆர்.கே.சுரேஷ். இதில், ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

சரவண சக்தி இயக்கும் இந்தப் படத்தில், ‘மேயாத மான்’ படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜா, ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இதன் படப்பிடிப்பு, இன்னும் சில தினங்களில் முடிந்துவிடும். எனவே, படத்தை பொங்கலுக்கு வெளியிட முயற்சி செய்து வருகின்றனர். சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விமலின் ‘மன்னர் வகையறா’ ஆகிய படங்கள் ஏற்கெனவே பொங்கல் ரிலீஸ் போட்டியில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்