விக்ரமுக்கு வில்லனான தயாரிப்பாளர்

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (17:11 IST)
பொதுவாக விக்ரம் தானே தயாரிப்பாளர்களுக்கு வில்லனாவார் என்று தலையை தடவ வேண்டாம். விஜய் சந்தர் இயக்கும் படத்தில் விக்ரமுக்கு வில்லனாக தயாரிப்பாளர் ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார்.


 
 
விஜய் சந்தர் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இதில் முதலில் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு அவர் விலகியதால் தமன்னா ஒப்பந்தமானார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
 
இந்தப் படத்தில் வில்லனாக தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தாரை தப்பட்டை மூலம் நடிகரான இவர் தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்