பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா படம். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இப்படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது, தெலுங்கு சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.