அதேபோல் சுமார் 8 லட்சம் லைக்ஸ்கள் 24 மணி நேரத்தில் இந்த டிரைலருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செம்மரக்கட்டைகள் கடத்தல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மிக அபாரமாக நடித்துள்ளதாகவும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருப்பதாகவும் டிரைலரை பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்
இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது, ஆனால் அவர் எதிர்பாராத விதமாக நடிக்க முடியாததால் அவருக்கு பதிலாக பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்