குறைந்த செலவில் தயாரித்த படங்களுக்கு மானியம்: தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:35 IST)
குறைந்த பட்ஜெட்டில் தயாரான சினிமாக்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்து மனு ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்துள்ளது 
 
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றி அமைக்க இரவும் பகலும் உழைத்து வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் அவர்கள், திரை உலகை காக்கும் வகையில் திரையரங்குகளை திறந்து 50 சதவீத இருக்கைகளுடன் இயங்குவதற்கு ஆணை பிறப்பித்துள்ளார்
 
தமிழகமெங்கும் உள்ள திரையுலக ரசிகர்கள் சிறிது இடைவெளிக்கு பிறகு திரையரங்கை நோக்கி வர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக முதல்வர் அவர்களுக்கு தமிழ் திரையுலகின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
 
மேலும் முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். குறைந்த முதலீட்டில் தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்படங்களுக்கு மானிய தொகை அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் மானிய தொகையை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வேண்டுமாய் இருகரம் குவித்து கேட்டுக்கொள்கிறோம்; இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்