கல்வி, பொருளாதார பாதிப்பை தடுக்கவே தளர்வுகள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (09:04 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வாரம் தோறும் கொரோனா பாதிப்பை பொறுத்து தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த வாரத்தில் நீண்ட காலம் கழித்து சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்த மீத இடங்களில் இந்த தளர்வுகள் அமல்படுத்தப்படும். மக்கள் தளர்வுகளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் பின்பற்ற வேண்டும். வணிக வளாகங்களில் அதிக அளவில் கூட்டத்தை சேர்க்க கூடாது. வெளியே காத்திருக்கும் மக்களும் உரிய இடைவெளி பின்பற்ற வேண்டும். மேலும் முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சானிட்டைசர் பயன்படுதுதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்றவற்றை தொடர வேண்டும். கல்வி, பொருளாதாரம் பாதிக்காமல் இருக்கவே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்