விக்ரமிடம் தாவிய விஜய் தயாரிப்பாளர்!!

வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (19:54 IST)
விஜய்யை வைத்து ‘பைரவா’ படத்தைத் தயாரித்த நிறுவனம், தற்போது விக்ரமை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கிறது.


 
 
பழம்பெரும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று விஜயா புரொடக்‌ஷன்ஸ். இந்த நிறுவனத்தின் நூறாவது படம், அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’. 
 
தொடர்ந்து, 101வது படமாக விஜய்யை வைத்து ‘பைரவா’ படத்தைத் தயாரித்தனர். இரண்டு ஹீரோக்களுமே கலெக்‌ஷன் ராஜாக்கள் என்றாலும், இந்த இரண்டு படங்களில் அவ்வளவு பெரிதாக வசூல் இல்லை. 

எனவே, அடுத்து விக்ரமை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை, கே.வி.ஆனந்த் இயக்கப் போகிறார். தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருக்கும் அவர், விக்ரம் ‘சாமி 2’ படத்தை முடித்தபிறகு ஷூட்டிங் செல்ல இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்