உயரும் சொகுசு கார்களின் விலை: ஜிஎஸ்டி தாக்கமா??

புதன், 30 ஆகஸ்ட் 2017 (19:23 IST)
சொகுசு கார்கள் மற்றும் எஸ்யுவி ரக கார்களுக்கள் விலை உயரயுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  


 
 
புதிதாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பால் கார்களுக்கான வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் கார்கள் விலை கட்டாயம் உயரும் என தெரிந்தது.
 
இதோடு தற்போது சொகுசு கார்கள் மீதான செஸ் வரி 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
முக்கியமாக 1500 சிசி-க்கும் அதிகமான திறனுடைய என்ஜின் கொண்ட கார்களுக்கும், 4 மீட்டருக்கு அதிக நீளமுடைய எஸ்யுவி ரக கார்களும் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்