என் மனைவி குஷ்புவிடம் மீசைய முறுக்கு படம் வெற்றி பெற்றால் ஆதிக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வரும். ஒருவேளை படம் சரியாகப் போகவில்லையென்றால் அடுத்த படத்தை ஆதியை வைத்தே எடுப்போம் என கூறியிருந்தேன். ஆனால் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. நான் நினைத்தது போலவே வெளி வாய்ப்புகள் வந்தன. அப்போது நான் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்தேன். ஆதி என்னைத் தொடர்பு கொண்டு, ஒரு கதை இருக்கிறது கேளுங்கள் என்றார்.
கதையைக் கேட்கும்போதே ரொம்ப பிடிச்சுபோச்சு. என் படத்தில் கருத்து சொல்லக்கூடிய படத்தைக் கொடுக்க முடியவில்லை. அதை ஆதி செய்ததால் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். ஆனால், பாடல்கள் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று ஒரு நிபந்தனை மட்டும் வைத்தேன். அதேபோல் மூன்று பாடல்களும் இணையத்தில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.
மேலும், இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், இதுவரை பாண்டிச்சேரியை பற்றிய படம் வந்ததில்லை. அவர் கதை கூறும்போதே பாண்டிச்சேரியைப் பற்றிக் கூறியது பிடித்திருந்தது. ஆகையால் செலவைப் பற்றி கவலைப்படாமல் படம் தரமானதாக இருந்தால் போதும் என்று அவர்களிடமே விட்டுவிட்டேன் என்றார்.