காதலர் தினத்தன்று ஏங்கி தவிக்கும் முரட்டு சிங்குளுக்கு ட்ரீட் கொடுத்த ஹிப் ஆப் ஆதி
வியாழன், 14 பிப்ரவரி 2019 (19:27 IST)
மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி அவ்னி மூவிஸ்’ சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் ‘நட்பே துணை’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக அறிமுக நடிகை அனகா நடிக்கிறார்.
இந்த படத்தில் ஆதியுடன் சேர்ந்து ஆர்.ஜே விக்னேஷ்காந்த்,எருமை சாணி புகழ் விஜய் , ஷா ரா, ராஜ் மோகன் , கரு.பழனியப்பன், கௌசல்யா,ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் இடம்பெறவுள்ள இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறவுள்ள மூன்றாவது பாடலான "ஆத்தாடி" பாடல் காதலர் தினமான இன்று முரட்டு சிங்கிள் பசங்களுக்கு விருந்தாக வெளிவந்துள்ளது.
காதலர் தினத்தன்று காதலியில்லாமல் ஏங்கி தவிப்பவர்களுக்கு இது நண்பர்கள் தினமாக மாற்றும் என ஹிப்ஹாப் தமிழா பதிவிட்டுள்ளார். நண்பர்கள் கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ள இப்பாடல் முழுக்க முழுக்க முரட்டு சிங்கிள் பசங்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.