வெற்றி பெற்ற முரளி உடனே பதவியேற்க முடியாது: ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (11:29 IST)
வெற்றி பெற்ற முரளி உடனே பதவியேற்க முடியாது: ஏன் தெரியுமா?
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு டி ராஜேந்தர் ஒரு அணியாகவும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஒரு அணியாகவும் தேனப்பன் எந்த அணியிலும் இன்றி தனியாகவும் என மூன்று பேர் போட்டியிட்டனர் 
 
இதில் சற்று முன் வெளியான அறிவிப்பின்படி தயாரிப்பாளர் முரளி வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவர் விரைவில் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது ஆனால் தேர்தலில் முரளி அணி வெற்றி பெற்றாலும் உடனடியாக பதவி ஏற்க முடியாது என தற்போது தெரியவந்துள்ளது 
 
தயாரிப்பாளர் சங்கம் தனி அலுவலர் கட்டுப்பாட்டில் தற்போது இருக்கிறது. எனவே தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பட்டியலை தனி அலுவலரிடம் தேர்தல் ஒப்படைப்பார் என்றும், அதன்பின்னர் தனி அலுவலர் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் குறித்து அரசின் அறிக்கை அளிப்பார் என்றும், அதன்பின்னர் அரசு எடுக்கும் முடிவை பொருத்தே தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்க முடியும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சந்திர பிரகாஷ் ஜெயின் 407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை அடுத்து கே ராஜன் 382 வாக்குகளும் ஜேஎஸ்கே 233 வாக்குகளும் பெற்றனர். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கதிரேசன் 493 வாக்குகளும், ஆர்கே 419 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்