பிரியா வாரியருக்கு திடீர் கட்டுப்பாடு விதித்த இயக்குனர்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (16:09 IST)
ஒரே வாரத்தில் ஒரே ஒரு கண்ணசைவு மூலம் உலகப்புகழ் பெறுவார் பிரியாவாரியர் என்று யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. இதில் மிகப்பெரிய லாபம் 'தி ஆடார் லவ்' படக்குழுவினர்களுக்குத்தான். இந்த படம் தற்போது எந்தவித விளம்பரமும் இன்றி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது

இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகும்வரை யாருக்கும் பேட்டி கொடுக்க கூடாது என்றும், அறிமுகம் இல்லாத யாரிடமும் போனில்பேசக்கூடாது என்றும் இயக்குனர் ஒமர் லூலூ, பிரியாவாரியருக்கு கன்டிஷன் போட்டுள்ளாராம்.

இதனையடுத்து பிரியாவாரியர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாராம். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. அதுவரை பிரியாவாரியரிடம் இருந்து இனிமேல் எந்த ஒரு பேட்டியையும் எதிர்பார்க்க முடியாது என்பது அவரது கோடிக்கணக்கான ஃபாலோயர்ஸ்களுக்கு ஒரு கசப்பான செய்தி தான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்