சிவகார்த்திகேயன் இயக்கத்தில் நடிக்கவேண்டும் - இளம் நடிகையின் ஆசை!

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (17:52 IST)
வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பொன்னான வாய்ப்பு தனக்கு கிடைத்ததில் கல்யாணி ப்ரியதர்ஷன் மிகுந்த  மகிழ்ச்சியாக உள்ளார்.  அவரது தமிழ் சினிமா அறிமுகம் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் “ஹீரோ” திரைப்படம் மூலம் இந்த வாரம் அரங்கேறுகிறது. டிரெய்லரில் மிகச் சிறு காட்சிகளிலே அவர் காட்டப்பட்டிருந்தாலும் அவரது அழகும், துள்ளல் உடல் மொழியும் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. “ஹீரோ” படத்தில் அவரது கதாப்பாத்திரம்  குறித்து கூறும்போது...
 
நான் ‘மீரா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ‘மீரா’ மிகவும் முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண். எதையும் பேசவும், செய்யவும் முன் பலமுறை யோசித்து செய்யும் பெண். நிஜ வாழ்வில் அதற்கு நேரெதிரானவள் நான். துடுக்குத்தனத்துடன் நினைத்ததை அப்படியே உளறி விடுவேன் எனக் கூறிச் சிரித்தார்.
 
“ஹீரோ” படக்குழுவினருடன் பணியாற்றியது குறித்து கூறும்போது...இயக்குநர் PS மித்ரன் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பெரும் திறமைக்காரராக இருக்கிறார். ஒவ்வொரு சிறு காதாப்பாத்திரத்தையும் கச்சிதமாக படைத்திருக்கிறார். நான் சொல்வதை விட படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடுவார்கள். 
 
சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனம் கொண்ட மனிதர் படப்பிடிப்பில் உள்ள ஒவ்வொருவரையும் அன்பாக பார்த்து கொள்வார். ஒரு சிறந்த  நடிகராக மட்டுமல்லாமல் அவரிடம் ஒரு திறமையான இயக்குநர் மறைந்திருக்கிறார். ஒரு நாள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்