தற்போது ப்ரதீப் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்திலும் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே இறுதிகட்டத்தில் உள்ளன. இந்நிலையில் LIK திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது மாற்றப்பட்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
LIK படத்தில் ப்ரதீப்புடன் எஸ் ஜே சூர்யா, க்ரீத்தி ஷெட்டி மற்றும் சீமான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ரவி வர்மன் மற்றும் சத்யன் சூர்யன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ப்ரதீப்பின் ட்யூட் படமும் தீபாவளி ரிலீஸை உறுதி செய்துள்ளது. ஆனால் இப்போது LIK படம் தீபாவளிக்கு வர வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்த படத்தின் சிலக் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.