ப்ரதீப்பின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

vinoth

வியாழன், 16 மே 2024 (07:44 IST)
தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் புரொடக்சன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தை தயாரித்து வரும் நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தை ’ஓமை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கிய நிலையில் முதல் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங்கை நடத்தி முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்