சிம்பு நடிக்க இருந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன்...!

vinoth

செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (10:20 IST)
தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் புரொடக்சன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தை தயாரித்து வரும் நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 

இந்த படத்தை ’ஓமை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவையும் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் பிரதீப் ரங்கநாதன் இந்த படம் குறித்து கூறும் தகவல்கள் உள்ளது. 

இந்நிலையில் இந்த படம் முதலில் சிம்பு நடிக்க இருந்ததாக சொல்லப்படுகிறது. ஓ மை கடவுளே படம் பார்த்த பின்னர் சிம்பு இயக்குனர் அஸ்வத்தை அழைத்து கதை கேட்டதாகவும், அவர் சொன்ன இந்த கதை அவருக்குப் பிடித்து நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அவரால் தேதிகள் ஒதுக்க முடியாத சூழலால் அஸ்வத் பிரதீப்பை வைத்து இயக்க முடிவு செய்து இப்போது படத்தை தொடங்கிவிட்டாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்